பாக்யாவின் ஹோட்டலுக்கு வந்த பெரிய பிரச்சனை.. எப்படி சமாளிப்பார்? இவர் தான் உதவனுமோ
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகா மற்றும் கோபி உடன் பாட்டி ஈஸ்வரியும் சென்ற பிரச்சனை ஒருபக்கம் என்றால் பாக்யாவுக்கு இன்னொரு பக்கம் சிக்கல் வர தொடங்கி இருக்கிறது.
பல்வேறு முயற்சிகளை செய்து பாக்யா தற்போது ஹோட்டலை தொடங்கி நடத்தி வருகிறார். அதற்கு பழனிச்சாமி தான் அதிகம் ஹெல்ப் செய்தது. அவர் பாக்யாவை ஒரு பக்கம் காதலிக்கவும் தொடங்கிவிட்டார்.
பிரச்சனை
பாக்யா ஹோட்டல் நடத்தி வரும் இடத்திற்கு அருகில் இருக்கும் கடையை ஒரு புது நபர் வாங்கி இருக்கிறார். அவர் அந்த இடத்தில் ஒரு பார் தொடங்கப்போவதாக வந்து சொல்கிறார்.
என் பாருக்கு வருபவர்கள் உங்கள் ஹோட்டலுக்கும் வருவார்கள் என அந்த ஓனர் கூறிவிட்டு போகிறார். என்ன இது புது பிரச்சனையாக இருக்கே, குடிபோதையில் வருபவர்களை எப்படி சமாளிப்போம் என பாக்யா கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்.
இருப்பினும் பாக்யாவுக்கு பழனிச்சாமி உதவுவது போலவும், அதன் பின் இருவருக்கும் மேலும் நட்பு அதிகரிப்பது போலவும் காட்சிகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.