கோபியின் சட்டையை பிடித்த ராதிகா.. என்ன மனுஷன்யா நீ? பாக்கியலட்சுமியில் இன்று
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ஜெனி வீட்டில் தவறி விழுந்து விட்ட நிலையில் அவரை ராதிகா ஹாஸ்பிடலில் கொண்டு சென்று சேர்க்கிறார். ஆனால் அதற்குப்பிறகு ராதிகா தான் ஜெனியை தள்ளிவிட்டார் என பாட்டி அவர் மீது பழி போடுகிறார்.
அதனால் மன வருத்தம் அடையும் ராதிகா கோபிக்கு போன் செய்து வர வைக்கிறார். ஆனால் கோபி வீட்டுக்குள் வந்த உடன் பாட்டி ராதிகா தான் ஜெனியை தள்ளிவிட்டதாக சொல்கிறார்.
சட்டையை பிடித்த ராதிகா
பாட்டி சொன்னதை கேட்டு கோபமடையும் கோபி நேராக அறைக்கு சென்று ராதிகாவை திட்டுகிறார். அதை கேட்டு கோபம் அடையும் ராதிகா உடனே கோபியின் சட்டையை பிடித்து திட்டுகிறார்.
'என்ன மனுஷன்யா நீ? என்னை பாத்தா எப்படி தெரியுது' என கேட்டு திட்டுகிறார். கோபி அதன் பின் ராதிகா மீது தவறு இல்லை என உணர்ந்து அவரை சமாளிக்கிறார்.
வந்து 10 வருஷம் ஆச்சு.. இன்னும் தமிழ் பேச மாட்டேங்குறீங்க! - ஸ்ரேயா சரணுக்கு இப்படி ஒரு பிரச்சனையா