பாக்கியாவிற்காக குடும்பத்துடன் சண்டைபோட்ட ராதிகா- பரபரப்பு புரொமோ
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி, பெயர் தான் மங்களகரமாக உள்ளது, ஆனால் அவரது வாழ்க்கையில் ஒன்று கூட நல்லதாவே நடப்பது இல்லை. அப்படி தான் இந்த சீரியலின் கதை சென்றுகொண்டிருக்கிறது.
மாமியார் எல்லாமே உன்னால் தான் என பழி போடுபவராகவே உள்ளார், கணவர் ஏமாற்றிவிட்டு இன்னொரு பெண்ணுடன் சென்றுவிட்டார்.
2 மகன்கள் அவர்களால் சந்தோஷம் இருக்கும் என்று பார்த்தால் இப்போது பிரச்சனை பூகம்பமாக வெடித்துள்ளது. செழியன்-மாலினியுடன் நெருக்கமாக இருந்தது குடும்பத்திற்கு தெரியவர ஜெனி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
குடும்பத்தினரிடம் கூறவில்லை என்ற பழியை பாக்கியா மீது போட்டு அவரை திட்ட தொடங்குகிறார் ஈஸ்வரி.
பரபரப்பு புரொமோ
எல்லாமே உன்னால் தான், எங்களிடம் கூறியிருந்தால் பேசி பிரச்சனையை முடித்திருக்கலாம் என வழக்கம் போல் கோபி மற்றும் ஈஸ்வரி பாக்கியா மீது பழியை போடுகிறார்கள்.
உடனே இதைக்கேட்ட ராதிகா தப்பெல்லாம் செழியன் மீது வைத்துக்கொண்டு பாக்கியாவை ஏன் திட்டுகிறீர்கள், ஒரு வார்த்தை தவறு செய்தவனை கேட்டீர்களா என செம சண்டை போடுகிறார்.
இதோ அந்த பரபரப்பு புரொமோ,