Baakiyalakshmi serial: கோர்ட்டில் வசமாக சிக்கிய கோபி.. ஆனால் இறுதியில் வந்த ட்விஸ்ட்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பான கட்டடத்தை எட்டி இருக்கிறது. கோபி பாக்யா உடன் கோர்ட்டில் நின்றுகொண்டிருக்கிறார், அடுத்த அவர்கள் கேஸ் தான் வர போகிறது. கோபிக்கு அதை நினைத்து பீதி ஆகிறது. வெளியில் வந்து நிற்கிறார், ஆனால் வக்கீல் அவரை வற்புறுத்தி உள்ளே அனுப்பி வைக்கிறார்.
அங்கே பாக்யாவுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்துவிடுவது போலவும், ஏன் இப்படி செய்தீர்கள் என கோபியின் சட்டையை பிடித்து அவர் கேள்வி கேட்பது போலவும் சீன் வருகிறது. எதிர்பார்த்தது போலவே இது கோபி காணும் கனவு தான்.
அதன் பிறகு நிஜத்திலேயே அவர்களை அழைக்கிறார்கள். எதுவும் சரியாக பாக்யா அங்கு சென்று சிரித்த முகத்துடனேயே நிற்கிறார். என்ன பிரச்சனை என நீதிபதி கேட்க, பாக்யா எதுவும் பதில் சொல்லவில்லை. எல்லாம் பெட்டிஷனில் தெளிவாக இருக்கிறது என சொல்லி வக்கீல் கூறுகிறார். திருமணம் ஆகி எத்தனை வருடம் ஆனது என கேட்க 25 வருடங்கள் என பாக்யா பதில் சொல்கிறார். எத்தனை குழந்தைகள் என கேட்க குடும்பத்தை பற்றி சொல்கிறார். பெண் நீதிபதி வேறு எதுவும் கேட்காமல் அவர்களை கவுன்சலிங் கூட்டி செல்லும் படி அனுப்பி வைக்கிறார்.
ஆனால் அதில் இருந்தும் தப்பிக்க முயற்சிக்கிறார் கோபி. அந்த அறைக்கு செல்லும் போது பாக்யாவை வெளியிலேயே நிற்க வைத்துவிட்டு இவர் மட்டும் உள்ளே செல்கிறார். உள்ளே அவர்கள் உங்கள் மனைவி எங்கே வரச்சொல்லுங்க என சொல்ல, கோபி என்ன செய்வது என தெரியாமல் விழிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.
தற்போதாவது பாக்யாவுக்கு உண்மை தெரிய வருமா என்பது அடுத்த வாரம் தான் தெரியும்.