ஜெயிலில் இருக்கும் தனது அம்மா, கோபத்தில் பொறுமையை இழந்த கோபி- பரபரப்பான பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல், இப்போது கதைக்களத்தில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
அதாவது ராதிகாவின் கர்ப்பத்தை கலைத்தார், அவர் கொலை முயற்சி செய்தார் என ஈஸ்வரி மீது புகார் அளித்துள்ளார் ராதிகாவின் அம்மா.
இதனால் போலீசார் ஈஸ்வரியை கைது செய்ய பாக்கியா மற்றும் அவரது குடும்பம் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த வார எபிசோடில் ஈஸ்வரி கொலை முயற்சி செய்தார் என்று அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடுகிறார்.
இன்றைய எபிசோட்
தனது அம்மாவை ஜெயிலுக்கு அனுப்பிய ராதிகா மற்றும் அவரது அம்மா மீது கடும் கோபத்தில் இருக்கும் கோபி வீட்டிற்கு வந்து அங்கு இருக்கும் பொருள்களை உடைக்கிறார்.
அதோடு ராதிகாவின் அம்மாவை கொலை செய்துவிடுவேன் என அவரின் கழுத்தை பிடிக்கிறார். இன்றைய எபிசோடில் பொறுமையை இழந்து எரிமலையாய் வெடிக்கிறார்.