பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர்களின் நிஜ பெயர், கதை முழு விவரம்
பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு குடும்ப தலைவியின் கதை. பாக்கியலட்சுமி தனது குடும்பத்தை மகிழ்ச்சியடையச் செய்ய பல கஷ்டங்கள் மற்றும் போராட்டங்களுக்கு ஆளாகிறார்.
ஆனால் எப்போதும் தனது குடும்ப உறுப்பினர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு அவமதிக்கப்படுகிறார். அக்கறையுள்ள மனைவி, பாசமுள்ள தாய், கருணையுள்ள மருமகள், பொறுப்புள்ள இல்லத்தரசி என நம் வீடுகளில் பாக்கியலட்சுமி ஒரு பாத்திரம்.
ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை பாக்கியலட்சுமி TRPயில் டாப்பில் உள்ளது. எதிர்ப்பாராத திருப்பங்கள், உணர்ச்சிகரமான கதை மற்றும் தொடர்புடைய சம்பவங்கள் எல்லா வயதினரையும் கவர்ந்திழுக்கிறது.
இந்த தொடர் ஆரம்பிக்கப்பட்டது 2020ம் வருடம் 27 ஜுலை மாதமாகும்.
Venus Infotainment Private Limited தயாரிக்கும் இந்த தொடரை சிவா சேகர், டேவிட் ஆகியோர் இயக்க பிரியா தம்பி, எஸ்.வி. ரத்ன குமார் கதையாசிரியர்களாக உள்ளனர்.
சீரியலில் நடிப்பவர்கள்
- கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி- பாக்கியலட்சுமி
- சதீஷ் குமார்- கோபிநாத்
- எஸ்.டி.பி ரோசரி- ராமமூர்த்தி
- ராஜலட்சுமி சந்து- ஈஸ்வரி
- ஆர்யன்- செழியன்
- விஷால்- எழிலன்
- நேஹா மேனன்- இனியா கோபிநாத்
- திவ்யா கணேஷ்- ஜெனிபர்
- ரேஷ்மா பசுபுலேட்டி- ராதிகா ராஜேஷ்
- ஷெரின் ஃபர்ஹானா- மயூரா
- ரித்திகா- அமிர்தா
வரப்போகும் கதைக்களம்
கதையில் கணவரால் ஏமாற்றப்பட்ட பாக்கியா அதை நினைத்து துவண்டு போகாமல் தனது குடும்பத்தை காப்பாற்ற சமையல் தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார்.
படிப்படியாக முன்னேரி அவர் வாழ்க்கையில் எப்படி ஜெயிக்கிறார் என்பதே மீதிக்கதையாக இருக்கும். இடையில் பாக்கியா ஏகப்பட்ட சவால்களை சந்திக்க இருக்கிறார்.