பாக்கியலட்சுமி நடிகை சுசித்ரா நடிக்கும் 'காதல் காதல் காதல்' புதிய சீரியல்.. இவருக்கு ஜோடி யார் தெரியுமா
பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் 5 ஆண்டுகளுக்கும் மேல் ஒளிபரப்பான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சுசித்ரா.

கடந்த ஆண்டு பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், நடிகை சுசித்ரா அடுத்து நடிக்கப்போகும் சீரியல் என்னவென்று என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
புதிய சீரியல்
இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் ஜோடியாக இணைந்து நடித்த சுசித்ரா - சதீஸ் மீண்டும் புதிய சீரியலில் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலுக்கு 'ஆதலால் காதல் செய்வீர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.

ஆனால், தற்போது நடிகர் சதீஸ் இந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டாராம். அவருக்கு பதிலாக ஹார்ட் பீட் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சந்திரசேகர், இந்த புதிய சீரியலில் சுசித்ராவுடன் இணைந்து நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 'ஆதலால் காதல் செய்வீர்' என இருந்த தலைப்பு தற்போது 'காதல் காதல் காதல்' என மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த புத்தம் புதிய சீரியலின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.