கேக் வெட்டி படு கொண்டாட்டத்தில் குடும்பம், பாக்கியாவிற்கு திருமணமா?- பாக்கியலட்சுமி சீரியல் புரொமோ
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் டிஆர்பியில் மாற்றம் கொண்டு வந்த சீரியல்.
இப்போது கதை கொஞ்சம் விறுவிறுப்பு இல்லாமல் செல்ல டிஆர்பியில் பின்னுக்கு சென்று கொண்டிருக்கிறது.
இப்போது கதையில் ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயம் தான் பரபரப்பாக சென்றது, அதன்பின் கதையை ஏதோ காரணத்தால் ஒன்றுமே இல்லாமல் இழுத்துக்கொண்டு செல்கிறார்கள்.
புதிய புரொமோ
தற்போது இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான புரொமோவில், இனியாவின் பிறந்தநாள் கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடப்படுகிறது.
அதோடு பழனிச்சாமி அக்கா மற்றும் அம்மா பாக்கியாவை பொண்ணு கேட்க பழம் எதுவும் கொண்டு வரவில்லை என பேச அதனை கோகி கேட்டுவிடுகிறார்.
பின் பாக்கியாவிடம் பழனிச்சாமியுடன் உனக்கு கல்யாணமா என்ன பெண் நீ என கோபி கேட்க அவர் கோபம் அடைகிறார். இதோ அந்த புரொமோ,