கேண்டீன் போச்சு.. 'ரொம்ப ஆடிட்ட பாக்யா' - எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய மாமியார்
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை எபப்டியாவது கேன்டீன் விட்டு அனுப்ப வேண்டும் என திட்டமிட்டு வில்லி ராதிகா பல்வேறு விஷயங்கள் செய்து, தற்போது அதில் ஜெயித்தும் விட்டார்.
பாக்யா தனது கேன்டீன் கையை விட்டு போனதால் சோகத்துடன் பொருட்களை அங்கிருந்து எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். அவரிடம் வேலைபார்த்த பெண்கள் இன்னும் குழப்பத்தில் இருக்கின்றனர். இனி மாத சம்பளம் கிடைக்காதா என்பதால், ஏற்கனவே பாக்யா கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கும்படி கேட்க்கின்றனர்.
பாக்யாவை திட்டிய மாமியார்
பாண்டிசேரியில் திருமணம் ஒன்றிற்கு சமையல் காண்ட்ராக்ட் எடுத்து சமைத்ததற்கு யாருக்கும் பாக்யா இதுவரை சம்பளம் கொடுக்காமல் இருக்கிறார். அதை உடனே கொடுக்கும்படி அந்த பெண்கள் வீடு தேடி வந்து பாக்யாவிடம் கேட்கின்றனர். பணத்தை எப்படியாவது கொடுத்துவிடுவதாக கூறி அனுப்புகிறார்.
"இது உனக்கு தேவைதான் பாக்யா.. நீ ரொம்ப ஆடிட்ட" என மாமியார் அப்போது பாக்யாவை திட்டுகிறார். "இதெல்லாம் நடக்கும் என அப்போதே தெரியும். அகலக்கால் வைக்காதே என அப்போதே சொன்னேனே" எனவும் கூறிவிட்டு போகிறார் அவர்.
மறுபுறம் பாக்யா கேன்டீன் விட்டு போன விஷயத்தை ராதிகா கோபியிடம் கூறுகிறார். அதை கேட்டு மகிழ்ச்சி ஆகும் கோபி அதை கொண்டாடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைந்தது.

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
