போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட பாக்கியா... சிக்கிய கோபி, பரபரப்பு புரொமோ
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி தொடர் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே தொடர் TRPயில் முன்னிலை வகித்து வருகிறது.
இதற்கு எல்லாம் முக்கிய காரணம் தொடரில் இருக்கும் கோபி கதாபாத்திரம் என்றே கூறலாம். அவர் செய்யும் திருட்டுத்தனத்தை பார்த்து ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர், எப்போது அவர் சிக்குவார் என்பது தான் ரசிகர்களின் பெரிய கேள்வியாக உள்ளது.
இன்றைய கதைக்களம்
இப்போது தொடரில் ராதிகா அசிரமத்தில் கொடுத்த உணவில் ஏதோ பிரச்சனை இருக்க அதனால் குழந்தை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் போலீசார் ராதிகாவை விசாரிக்க அவர் பாக்கியாவை பற்றி கூறுகிறார்.
உடனே போலீசார் பாக்கியாவை வீட்டிற்கு சென்று கைது செய்து போலீஸ் நிலையத்தில் விசாரிக்கிறார்கள்.
அடுத்து என்ன
இவர்களின் இந்த பிரச்சனையில் கோபி சிக்குவார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால் கோபி இன்று பாக்கியா போலீஸ் நிலையம் வருவதற்குள் மயூவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிடுகிறார்.
ஆக அவர் இன்று சிக்கவில்லை, அடுத்து எப்போது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ பாக்கியா கைதாகும் அதிரடி புரொமோ,
விஜய்யின் பீஸ்ட் படத்தின் இரண்டாம் நாள் சென்னை வசூல்- அதிகரித்ததா அல்லது குறைந்ததா?