சாதாரணமாக வீட்டிற்கு வந்த கோபியை பளார் என விட்ட அவரது அப்பா- பரபரப்பான ரசிகர்கள் விரும்பும் புரொமோ
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர்.
பாக்கியலட்சுமி கதைக்களம்
பாக்கியா ராதிகாவிற்காக சமைத்த சமையலில் எந்த கலப்படமும் இல்லை என்பதை நிரூபித்து எழில் மற்றும் செழியன் தங்களது அம்மாவை காப்பாற்றுகின்றனர். நீதிமன்றத்தில் உணவை பரிசோதித்த ஆதாரத்தை வைத்து அவர் எந்த தவறும் செய்யவில்லை என விடுவிக்கப்படுகிறார்.
இன்றைய நிகழ்ச்சியில் பாக்கியா வெளியே வரும் காட்சிகள் தான் காட்டப்படுகிறது.
அந்த எமோஷ்னல் காட்சியை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலாக தான் இருக்கின்றனர்.
அடுத்த புரொமோ
தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் புதிய புரொமோ வந்துள்ளது. அதில் சாதாரணமாக கோபி வீட்டிற்கு வந்து பாக்கியா இன்னும் வரவில்லையா என கேட்க அவரது அம்மா படு கோபமாக திட்டுகிறார்.
அந்த நேரம் அவரது அப்பா எழுந்து கோபியை பளார் என கன்னத்தில் அறைகிறார்.
இத்தனை நாட்களும் திருட்டுத்தனமாக பாக்கியாவை ஏமாற்றும் கோபியை அவரது அப்பா அடிக்கும் காட்சிகள் ரசிகர்கள் விரும்பிய ஒரு சீன் என்றே கூறலாம்.
இதோ அந்த பரபரப்பான புரொமோ