ராதிகாவுடன் ஊர் சுற்றிய கோபி, திடீரென பார்த்த எழில்- அடுத்து நடக்கப்போகும் பரபரப்பு
பாக்கியலட்சுமி குடும்ப பெண்ணின் கதையை உணர்த்தும் ஒரு தொடர். பல இடங்களில் கதை எதார்த்தமாக இருந்தாலும் சில நேரங்களில் கதைக்காக சில விஷயங்களை காட்டுகின்றனர்.
ஏமாற்றும் கோபி
ராதிகாவுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு பல மாதங்களாக குடும்பத்திற்கு தெரியாமல் பழகி வருகிறார். உண்மை தெரிந்தவுடன் அவர் அப்பா பேச முடியாமல் நோயில் அவதிப்படுகிறார்.
ராதிகாவும், பாக்கியாவும் நல்ல தோழிகளாக இருந்தும் கோபியை பற்றி உண்மை தெரிந்துகொள்ளாமல் சகஜமாக உள்ளார்.
ஒவ்வொரு முறையும் சிக்கிக் கொள்ளும் போதும் ஏதாவது செய்து தப்பித்து விடுகிறார் கோபி.
எழிலிடம் சிக்கிய கோபி
கோபி ராதிகா-மஞ்சுவிடம் வழிய வழிய பேசினாலும் அவரது சுயரூபம் சிடுசிடுவென இருப்பது தான். இதனாலேயே தனது அப்பாவை கொஞ்சம் வெறுப்பவராக இருக்கிறார் எழில்.
அவர் குடும்பத்துடன் வெளியே வர அதே நேரம் கோபியும் ராதிகாவுடன் அதே இடத்திற்கு வருகிறார்.
தனது குடும்பம் இந்த இடத்திற்கு வந்திருக்கிறது என்பதை உணர்ந்த கோபி உடனே அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார். அந்த சமயம் எழில் தனது அப்பா யாரோ ஒரு பெண்ணுடன் இருப்பதை காண்கிறார்.
அடுத்து எழில் கோபத்துடன் ஏதாவது அதிரடியாக செய்வாரா அல்லது முன்பு போல் பேச்சு மட்டும் தானா என்பது தெரியவில்லை.
வடிவேலுவின் வில்லு பட கெட்டப்பில் ஷிவாங்கி- இந்த வார குக் வித் கோமாளி கெட்டப், லீக் ஆன புகைப்படம்