கோபிக்கு ராதிகாவுடன் விரைவில் திருமணம், அதன்பிறகு நடக்கப்போவது இதுதான்- பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்
பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியின் செம ஹிட் சீரியல். ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பாகும் இந்த தொடரின் கதையை எழுதுவதே பிரியா என்ற பெண் தான்.
எனவே தான் தொடரில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள விஷயங்கள் அதிகம் வருகின்றன.
இந்த தொடருக்கு விஜய் தொலைக்காட்சி விருது விழாவில் ஏகப்பட்ட விருது கிடைத்தது.
பாக்கியலட்சுமி தொடர் பெற்ற விருதுகள்
- துணை நடிகை- ரேஷ்மா
- சிறந்த அப்பா- ரோசரி
- துணை நடிகர்- விஷால்
- சிறந்த நாயகி- சுசித்ரா
- சிறந்த இயக்குனர்- டேவிட்
- சிறந்த சீரியல்- பாக்கியலட்சுமி
- சிறந்த வில்லன்- சதீஷ்
நடிகர் கொடுத்த அப்டேட்
சிறந்த அப்பாவுக்கான விருது பெற்ற ரோசரியிடம் தொகுப்பாளர்கள் கோபி சிக்குவாரா உங்களிடம் அடி வாங்குவாரா என கேட்டனர்.
அதற்கு அவர் விரைவில் கோபி-ராதிகா திருமணம் நடக்க இருக்கிறது, அப்போது குடும்பமே சேர்ந்து அவரை அடிக்கும் என கூறியுள்ளார்.
அவர் சொன்னதை வைத்து பார்க்கும் போது கோபி-ராதிகா திருமணம் உறுதியாகியுள்ளது தெரிகிறது.
மீண்டும் வந்தது விஜய் டிவியில் பாதியில் நிறுத்தப்பட்ட தொடர்- ரசிகர்கள் உற்சாகம்