பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலகுகிறாரா?- மற்றொரு நடிகை போட்ட பதிவு
விஜய் தொலைக்காட்சி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் இப்போது டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி தொடர் தான். இந்த தொடர் தமிழகத்தில் இருக்கும் அனைத்து குடும்ப பெண்களின் ஆதரவை பெற்றுள்ளது என்றே கூறலாம்.
சீரியல் குழுவினரும் மற்ற ஊர்களில் உள்ள பெண்களை நேரில் சந்தித்தார்கள், அந்த புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் அதிகம் பரவி இருந்தது.
நடிகை போட்ட பதிவு
இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். இவர் இப்போது விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாகும் புதிய தொடரான செல்லம்மா சீரியலிலும் நடிக்கிறார்.
எனவே அவர் பாக்கியலட்சுமி முடித்ததும் உடனே செல்லம்மா தொடருக்கு செல்ல வேண்டும். இதனால் பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் அவரால் தொடர்ந்து இருக்க முடியாது. தொடரில் இனியாவாக நடிக்கும் நேஹா தனது இன்ஸ்டாவில் திவ்யா கணேஷை டாக் செய்து வி மிஸ் யூ அக்கா என பதிவு செய்துள்ளார்.
வி மிஸ் யூ என அந்த வீடியோவில் இடம்பெற்ற புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னது திவ்யா கணேஷ் வெளியேறுகிறாரா என அதிர்ச்சியாகினர்.
உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை படப்பிடிப்பிற்கு செல்வதால் மிஸ் யூ என்று நேஹா பதிவு செய்திருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்,

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
