இனியா செய்த விஷயத்தால் மாமனார் குடும்பம் ஓட்டம்.. பாக்கியலட்சுமி சீரியலில் இன்று
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அவரை நிதிஷ் தொடர்ந்து மோசமாக பேசி வருகிறார்.
தன்னை ஏமாற்றி சுதாகர் குடும்பம் எப்படி திருமணம் ஏற்பாடு செய்தது, அதன் பின் நிதிஷ் போதை பழக்கத்திற்கு அடிமையானார் என்ற உண்மை தெரிந்த பின் நடந்த சம்பவங்கள் என அனைத்தையும் மீடியா பேட்டியில் சொல்கிறார் இனியா.
அதன் இந்த போலீஸ் ஐஜி அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துவிட்டு வருகிறார்.
தலைமறைவான மாமனார் குடும்பம்
இனியா கொடுத்த புகாரின் அடிப்படையில் சுதாகர் மற்றும் குடும்பத்தினரை கைது செய்ய போலீஸ் வருகிறது. ஆனால் அந்த தகவலை முன்பே அறிந்து மொத்த குடும்பமும் தலைமறைவாகிவிடுகிறது.
அதன் பின் சுதாகர் கோபியை சந்தித்து இனியா கொடுத்த புகாரை வாபஸ் வாங்கும்படி மிரட்டுகிறார்.
விரைவில் பாக்கியலட்சுமி சீரியல் முடிய இருக்கும் நிலையில் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
[]