5 வயதில் பெற்றோரை இழந்தேன், அனாதையாக சென்னை வந்தேன்.. பாக்கியலட்சுமி 'கோபி' சதீஷ் வாழ்க்கையில் இவ்ளோ துயரமா
பாக்கியலட்சுமி தொடரில் நெகடிவ் கேரக்டர் கோபி ரோலில் நடித்து வருபவர் சதிஷ். அந்த சீரியல் பார்ப்பவர்கள் நிச்சயம் கோபியை தினமும் திட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு மோசமான கதாபாத்திரம்.
நான் நடிகன், அது நடிப்பு மட்டும்தான் என சதீஷ் பல முறை விளக்கம் கொடுத்தாலும், நிஜத்திலும் அவரை பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சதீஷ் தனது சொந்த வாழ்க்கையில் சந்தித்த துயரம் பற்றி பேசி இருக்கிறார்.
"5 வயதில் தம்பியை இழந்து, விபத்தில் பெற்றோரை இழந்து.. ஒரு அனாதையாக சென்னைக்கு வந்தேன். இரண்டு சட்டை, இரண்டு அரை trouser மட்டும் தான் வைத்திருந்தேன். என் அத்தை வீட்டில் தான் வாழ்ந்தேன், வளர்த்தேன். "
"எனக்கு தமிழ் பேச சொல்லி கொடுத்து, வாழ்க்கை கொடுத்து, இப்போது வருமானம் கொடுத்து, பெயர் புகழ் கொடுத்து, இன்றும் என்னை வாழ வைப்பது தமிழன்னை தான்."
"தமிழ் ஒரு மொழி மட்டுமில்லை.. அது கலாச்சாரம், அது ஒரு மதம், அது ஒரு சக்தி. வாழ்க தமிழ்" என சதீஷ் பேசி இருக்கிறார்.
5 வயதில் பெற்றோரை இழந்தேன்.. பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ்#Baakiyalakshmi #Sathish #Gopi pic.twitter.com/VeYAhz6qk5
— Parthiban A (@ParthibanAPN) July 14, 2022

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
