முடிவுக்கு வரப்போகும் பாக்கியலட்சுமி சீரியல்.. அதிர்ச்சியான ரசிகர்கள், ஆனால் அனைவருக்கும் காத்திருந்த ட்விஸ்ட்
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியின் டாப் 3 சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா, கோபி, ராதிகா, எழில், செழியன், ஜெனி, அமிர்தா என பல முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன.
இந்த அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதை அதிகளவில் கவர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்க சின்னத்திரை வரலாற்றில் TRP-யில் சாதனை படைத்த சீரியலில் ஒன்றாகும் பாக்கியலட்சுமி.
சாதனை படைத்த பாக்கியலட்சுமி
இந்நிலையில், மக்களால் கொண்டாடப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக துவங்கி 1000 எபிசோட்களை கடந்துள்ளது. சின்னத்திரையில் 1000 எபிசோட்களை கடப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.
மக்கள் அந்த சீரியலை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த அளவிற்கு நீடித்து நிலைக்க முடியும். அந்த சாதனையை தற்போது பாக்கியலட்சுமி சீரியல் செய்துள்ளது. இதற்காக மக்களுக்கு நன்றி என தெரிவித்து விஜய் தொலைக்காட்சி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளனர்.
பாக்கியலட்சுமி சீரியல் இப்போது முடிவுக்கு வந்துவிடும், இன்னும் சில வாரங்களில் முடிவடையப்போகிறது, விரைவில் முடிவடைய போகிறது என பல வதந்திகள் வெளிவந்துள்ளது.
ஆனால், அதயெல்லாம் தாண்டி தற்போது சின்னத்திரையில் மாபெரும் சாதனையை இந்த சீரியல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த பதிவு..