ரஜினியின் பாட்ஷா பட Style Style Than பாடல் முதலில் இசையமைப்பட்டதே அஜித் படத்திற்கா?
ரஜினியின் பாட்ஷா
நடிகர் ரஜினியின் திரைப்பயணத்தில் நடித்த படங்களில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு திரைப்படம் பாட்ஷா.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன் என பலர் நடிக்க இப்படம் 1995ம் ஆண்டு வெளியாகி இருந்தது.
தேவா அவர்கள் இசையமைக்க ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் அண்மையில் கூட சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்தது.
இந்த படத்தில் Style Style Than பாடல் செம ஹிட், தற்போது இந்த பாடல் குறித்த ரகசியத்தை எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகரின் பேட்டி
அதில் அவர், பாட்ஷா படத்தில் வரும் ஸ்டைலு ஸ்டைலு தான் பாடல் நடிகர் அஜித்தின் ஆசை படத்திற்காக முதலில் போடப்பட்டது. ஆனால் சற்று மெலடியாக வேண்டும் என இயக்குனர் வசந்த் கேட்டுக் கொண்டதால் மீனம்மா பாடலை தேவா கொடுத்தார்.
Style Style பாடலை பாட்ஷா படத்தில் பயன்படுத்திக் கொண்டனர் என கூறியுள்ளார். மாரிமுத்து அவர்கள் ஆசை படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் பட புகழ் நடிகை ரம்யா கிருஷ்ணன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?