நிகழ்ச்சி மேடையில் போட்டியாளர் காலில் விழுந்த பாபா பாஸ்கர் மாஸ்டர்.. எமோஷ்னல் நிகழ்வு
ஜீ தமிழ்
எளியவர்களும் திறமை உள்ளவர்கள், அவர்களும் வெளிச்சத்திற்கு வர வேண்டும், மக்களின் பார்வை பட வேண்டும் என்ற நோக்கில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஷோ தான் டான்ஸ் ஜோடி டான்ஸ்.
நடனம் நன்றாக ஆட தெரிந்தும் தங்களது திறமையை வெளிக்காட்ட முடியாமல் இருப்பவர்களுக்கு ஏற்படுத்தும் ஒரு வாய்ப்பாக இந்த ஷோ ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் 3வது சீசன் டான்ஸ் ஜோடி டான்ஸ் லோடட் என்ற பெயரில் மார்ச் 1ம் தேதி முதல் பிரம்மாண்டமாக ஆரம்பமாக உள்ளது. 24 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்க பாபா பாஸ்கர், சினேகா, வரலட்சுமி ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
புரொமோ
விரைவில் தொடங்கவுள்ள நிலையில் நிகழ்ச்சியின் முதல் புரொமோ வெளியானது. பஞ்சமி என்ற பெண் அறிமுகம் ஆகிறார், திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர்.
அவர்களை வளர்த்தபடியே காட்டு வேலைகளுக்கும், வயல் வேலைகளுக்கும் சென்று கொண்டிருக்கிறார்.
பாட்டு சத்தம் கேட்டாலே தன்னை அறியாமலே டான்ஸ் வந்துவிடுகிறது, தனது திறமையை வெளிக்காட்ட கணவர் சப்போர்ட்டுடன் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். புடவையை தூக்கி சொருகி அவர் ஆடிய நடனத்தை கண்டு நடுவர்கள் வாவ் சொல்லிவிட்டனர்.
25 வயதான அவர் பெண்ணின் நடனத்தை பார்த்து வயது வித்தியாசம் இன்றி அந்தப் பெண்ணின் காலில் விழுந்து வணங்கி இருக்கிறார்.

Neeya Naana: மாமியார் வீட்டில் பிரியாணியில பீஸே வைக்கலை! குமுறிய மருமகன்... கோபிநாத் ரியாக்ஷன் Manithan
