தோல்விக்கு பின் 20 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீசான பாபா.. இந்தமுறை வெற்றியா? தோல்வியா?
பாபா ரீ ரிலீஸ்
ரஜினிகாந்த் நடித்து, தயாரித்து, கதை, திரைக்கதை எழுதி வெளிவந்த திரைப்படம் பாபா. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.
கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் வெற்றியடையவில்லை.

இப்படம் வெளிவந்த 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரஜினிகாந்த் மீண்டும் பாபா படத்தின் கடந்த 10ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்தார். ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
உலகம் முழுவதும் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 80 லட்சம் வரை வசூல் செய்தது பாபா.
வெற்றியா தோல்வியா
இந்நிலையில், முதல் முறை தோல்வியடைந்த பாபா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி இந்த முறை மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

கடும் மழை பெய்த போதிலும் பாபா திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்முலம் தமிழகத்திலும், தமிழகத்தை தாண்டியும் பாபா திரைப்படம் சிறந்த வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri