ஜீ தமிழ் சூப்பர்ஹிட் சீரியலில் களமிறங்கும் நடிகர் பப்லு பிரித்விராஜ்.. வெளிவந்த மாஸ் புரோமோ வீடியோ
அயலி
அண்ணா, கார்த்திகை தீபம், வீரா, அயலி என ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் அயலி.

சற்று மாறுபட்ட கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தேஜஸ்வினி, வித்யா மோகன், ராம்ஜி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
பிரித்விராஜ்
இந்த நிலையில், அயலி சீரியலில் விக்ரம் என்கிற கதாபாத்திரத்தில் மாஸாக களமிறங்கியுள்ளார் நடிகர் பப்லு பிரித்விராஜ். சின்னத்திரையில் பல வெற்றி சீரியல்களில் நடித்து மக்கள் மனதை வென்ற பிரித்விராஜ், பாலிவுட் சென்று அங்கு அனிமல் படத்திலும் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

தற்போது அயலி சீரியலில் விக்ரம் கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ள இவரால் சீரியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். புரோமோ வீடியோ இதோ: