ஜிம்மில் விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய கண்ணான கண்ணே சீரியல் நடிகர் பப்லு
சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வருபவர் நடிகர் பப்லு. அவர் ஒரு காலத்தில் சினிமாவில் நடித்து பாப்புலர் ஆனவர் அவர். தினமும் ஜிம்முக்கு செல்லும் அவர் இந்த வயதிலும் நல்ல உடல் தோற்றத்தை மெயின்டெயின் செய்து வருகிறார். தனது ஒர்கவுட் வீடியோக்களை பப்லு தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்தது உண்டு.
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோ அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது. அதில் நடிகர் பப்லு பெஞ்ச் பிரெஸ்ஸில் படுத்தபடி வெயிட் தூக்க தயாராகிறார். ஆனால் வெயிட் அவர் பிடிக்கும்முன்பு அவர் மீது விழுகிறது.
அவருக்கு என்ன ஆனது என வீடியோ பார்த்து அனைவரும் ஷாக் ஆன நிலையில் தான் நலமாக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
பதற வைக்கும் அந்த வீடியோ இதோ..