தெறி பட ரீமேக் பேபி ஜான் படத்தின் வசூல்.. மிகவும் குறைவு! எவ்வளவு தெரியுமா

Kathick
in திரைப்படம்Report this article
பேபி ஜான்
2016ல் வெளிவந்து தளபதி விஜய்யின் சூப்பர்ஹிட் திரைப்படங்களில் ஒன்றாக மாறியது தெறி. விஜய்யின் கம்பேக் படமாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் அட்லீ இயக்கிய இப்படத்தை தற்போது ஹிந்தியில் பேபி ஜான் என்கிற தலைப்பில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தை அட்லீ தயாரிக்க, காலிஸ் என்பவர் இயக்கியுள்ளார்.
விஜய் ஏற்று நடித்திருந்த ஹீரோ கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்க, கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பாக்ஸ் ஆபிஸ்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேபி ஜான் படம் வெளிவந்து இரண்டு நாட்களை கடந்துள்ள நிலையில் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இரண்டு நாட்களில் உலகளவில் பேபி ஜான் படம் ரூ. 28 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது மிகவும் குறைவான வசூல் என்றும், இதனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அடி என்றும் கூறுகின்றனர்.