தெய்வத்திருமகள் நடிகை பேபி சாராவின் தந்தையை பார்த்துள்ளீர்களா.. என்னது, அவரும் ஒரு நடிகர் தானா
தமிழில் வெளியான தெய்வத்திருமகள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன்.
இதன்பின் சைவம், விழித்திரு என சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். ஆனால் ஹிந்தியில் வெளியான பல திரைப்படங்களில் முக்கியமானக் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார்.
மேலும் தற்போது மணி ரத்னம் இயக்கி வரும் பிரமாண்ட படைப்பான, பொன்னியின் செல்வனில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை சாரா அர்ஜுன், பிரபல நடிகர் ராஜ் அர்ஜுனின் மகள் தானாம்.
நடிகர் ராஜ் அர்ஜுன் ஹிந்தியில் மிகவும் பிரபலமான நடிகர் ஆவார். மேலும் தமிழில் வெளியான தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri