ஜீ தமிழில் அடுத்தடுத்து முடிவுக்கு வரப்போகும் 3 சீரியல்கள்... ரசிகர்கள் ஷாக்
ஜீ தமிழ்
ஜீ தமிழ், தமிழ் சின்னத்திரையில் டிஆர்பியில் டாப்பில் வந்துகொண்டிருக்கும் ஒரு தொலைக்காட்சி.
சன் மற்றும் விஜய் தொலைக்காட்சி டிஆர்பியில் கலக்கிக் கொண்டிருக்க அவர்களுக்கு அடுத்தபடியாக ஜீ தமிழ் வளர்ந்து வருகிறது. சமீபத்தில் ஜீ தமிழில் சின்னத்திரை விருது விழா நடைபெற்றது.
தற்போது ஜீ குடும்ப விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்டம் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி இருந்தது.
கிளைமேக்ஸ்
ஜீ தமிழ் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் யாரெல்லாம் விருது வாங்கப்போகிறார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக இருந்த நேரத்தில் சீரியல்கள் குறித்து ஒரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது.
அதாவது நாம் ஏற்கெனவே இன்னும் சில மாதங்களில் ஜீ தமிழிக் கெட்டி மேளம் சீரியல் முடிவுக்கு வரப்போவதாக அறிவித்தோம். இந்த நிலையில் மேலும் 2 சீரியல்கள் விரைவில் முடிய இருப்பதாக தகவல் வந்துள்ளது.
அது என்னென்ன சீரியல்கள் என்றால் மாரி மற்றும் நினைத்தாலே இனிக்கும் தொடர்களும் முடிகிறதாம். அடுத்தடுத்து கெட்டி மேளம், மாரி, நினைத்தாலே இனிக்கும் தொடர்கள் முடியப்போவதாக தகவல் வந்ததையடுத்து ரசிகர்கள் செம ஷாக் ஆகியுள்ளனர்.