Back To The Future Part 2 ஒரு சிறப்பு பார்வை
முதல் பாகத்தில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்த டாக்டர் மற்றும் மார்டின் மெக்லே இந்த முறை எதிர்காலத்தில் அதாவது 2015-க்கு பயணிப்பதே இந்த பாகத்தில் சிறப்பம்சம், இந்த பாகம் 1989-ம் ஆண்டு திரைக்கு வந்து 300+ மில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்துள்ளது, இந்த படம் zee5 மற்றும் Primeல் உள்ளது.

சரி இது என்ன கதை
மார்டின் 1955-ல் இருந்து டாக்டர் உதவியால் மீண்டும் 1985 வருகிறார், ஆனால் டாக்டர் இந்த முறை மார்டின் உன் சந்ததியே 2015-ல் ஆபத்தில் உள்ளது, வா காப்பாத்த வேண்டும் என மார்டின் மற்றும் அவருடைய காதலி ஜெனிபர்-யை அழைத்துக்கொண்டு 2015-ம் ஆண்டு செல்கிறார்.
அங்கு ஜெனிபரை ஒரு இடத்தில் தூங்க வைத்திட்டு இவர்கள் 2015-ல் இருக்கும் மார்டின் மகன் செய்யாத குற்றத்திற்கு சிறைக்கு செல்ல இருப்பதை தடுக்க செல்கின்றனர்.

அந்த நேரத்தில் ஜெனிபருக்கு மயக்கம் தெளிந்து எந்திரிக்க அவர் 2015-ல் இருக்கும் தன் வயதான கதாபாத்திரத்தை சந்திக்க மிகப்பெரிய குழப்பம் காலக்கோட்டில் உருவாகிறது.
அதோடு அங்கு மெக்கானிக் ஆக இருக்கும் பிஃப் அதாவது முதல் பாகத்தின்(முதல் பாகம் விமர்சனம் பார்க்க) வில்லன், இவர் டாக்டர், மற்றும் மார்டின் டைம் ட்ராவல் செய்ததை அறிந்து 1985-லிருந்து 2015 வரை விளையாட்டில் எந்தெந்த அணி வெற்றி பெற்றது என்ற குறிப்பு புத்தகத்தை எடுத்துக்கொண்டு 1985 சென்று தன் இளம் வயது பிஃப்-டம் கொடுக்கிறார்.

அதை வைத்து பிஃப் நம்பர் 1 பணக்காரர் ஆக, 2015-லிருந்து மார்டின் 1985 வர ஹில் வேலி நகரமே தலை கீழ் ஆகியுள்ளது, பிஃப் மார்டின் அம்மாவை திருமணம் செய்து கொடுமை படுத்தி வருகிறார்.
அந்த நகரமே சூதாட்ட போதையில் மூழ்க, மார்டின் எப்படியாது அந்த புத்தகத்தை இளம் வயது பிஃப்-டம் இருந்து பறிக்க வேண்டும் அப்போது தான் ஹில் வேலி நார்மல் ஆகும் என மீண்டும் 1955 பயனப்பட அதன் பின் என்ன ஆனது என்பதன் சுவாரஸ்யமே இந்த பேக் டு தீ பியூச்சர் பார்ட் 2.

இதில் என்ன ஸ்பெஷல்
இந்த பாகத்தில் ஸ்பெஷலே எதிர்காலத்திற்கு செல்வது தான், தற்போது பார்ப்பவர்களுக்கு இந்த படம் நார்மல் ஆக இருக்கலாம், ஏனெனில் நாம் டெக்னாலஜி உச்சத்தை கண்ட ஜெனரேஷன்.
ஆனால், 1989-ல் இப்படி ஒரு படம் நினைத்து பாருங்கள், 2015-ல் பறக்கும் கார், பறக்கும் ஸ்கேட்டிங் போர்ட், டிஜிட்டல் பலகைகள், வெப் கேமராவில் லைவில் பேசுவது என இயக்குனர் இந்த காலத்தில் நடப்பதை 1989-லேயே கறபனையின் உச்சம் சென்றிருப்பார்.

அதிலும் 2015 ஸ்கேட்டிங்-யை 1955-க்கு எடுத்து சென்று வில்லன் பிஃப்-டம் இருந்து தப்பிக்கும் காட்சி எல்லாம் பரபரப்பின் உச்சம், இதில் கூடுதல் சிறப்பம்சமாக மார்டின் ஹெல் வேலி நகரத்தை நார்மல் ஆக்க 1955 போக அங்கு ஏறகனவே முதல் பாகத்தில் வந்த மார்டின் இருக்க, அங்கு நடக்கும் சுவாரஸ்யம் எல்லாம், தற்போது எப்படி உங்களுக்கு இருக்கும் தெரியவில்லை.
ஆனால், 1989-ல் இந்த படம் பார்த்தவர்களுக்கு திரை விருந்து தான். கண்டிப்பாக பாருங்கள் உங்களுக்கு நல்ல திரை விருந்து கிடைக்கும்.
