Backrooms: திரை விமர்சனம்
ஹாலிவுட்டில் வெளியாகி 2000 கோடிக்கு மேல் வசூலித்துள்ள ஹாரர் படமான Backrooms எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
1990யில் ஃபர்னிச்சர் ஸ்டோர் உரிமையாளராக இருக்கும் கிளார்க், தனது கடையில் எலெக்ட்ரிக்கல் பிரச்சனை இருப்பதை கவனிக்கிறார். அதனால் எலெரிக்ட்ரிஷியனை வரவழைத்து சரிபார்க்க சொல்கிறார். எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது; ஆனால் இந்த ஸ்விட்ச்கள் மட்டும் எப்படி கோணாலாக உள்ளன என்று வினவுகிறார்.
அதற்கு கிளர்க்கிற்கும் பதில் தெரியவில்லை என்றாலும் எல்லாம் சரியாக உள்ளது எனக் கூறிவிட்டு எலெக்ட்ரிஷியன் சென்றுவிடுகிறார். அதன் பின்னர் ஃபர்னிச்சர் ஸ்டோரிலேயே உறங்கும் கிளார்க், டிவி பார்த்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென ஆப் ஆவதும், லைட்ஸ் அணைந்து எரிவதையும் பார்த்து குழம்புகிறார்.

இது இன்னொருநாளும் தொடர, கிளார்க் ஸ்விட்ச் போர்ட்க்கு செல்கிறார். எல்லா ஸ்விட்ச்களையும் ஆஃப் செய்து பார்க்கிறார். அப்போது சுவரில் ஒரு கோடு போல் சிறிய ஒளி தெரிகிறது. அதன் அருகில் சென்று சுவரை கிளார்க் தொட, அவரது கை உள்ளே செல்கிறது. பின் அவர் முழுமையாக சுவரை ஊடுருவி மறுபக்கம் செல்கிறார்.
அங்கு பெரிய அறை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். அந்த அறையில் இருந்து பல அறையில் நீண்டுகொண்டே செல்கின்றன. சில அறைகளை கடந்து யாராவது இருக்கிறார்களான என்று கிளார்க் செல்ல, ஒரு வினோத சத்தம் கேட்கிறது.

தன்னை யாரோ தாக்க வருகிறார்களோ என்று பயந்து கிளார்க் சுவரை ஊடுருவி தனது ஸ்டோருக்கு வந்துவிடுகிறார். இதனை அவர் தனது தெரபிஸ்ட் மேரியிடம் கூற அவர் நம்ப மறுக்கிறார்.
அதனால் தனது அசிஸ்டென்ட் கேட் மற்றும் அவரது பாய்ப்ரெண்ட் பாபியையும் அழைத்துக் கொண்டு, அந்த இரகசிய அறையை படம்பிடித்து மேரியிடம் காட்ட வேண்டும் என்று செல்கிறார். அதன் பின்னர் அங்கு அவர்களுக்கு என்ன ஆனது? மேரிக்கு உண்மை தெரிந்ததா? என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
20 வயதேயான கேன் பர்சன்ஸ் இயக்கியுள்ள முதல் திரைப்படம் இது. அவர் இதற்கு முன் Backrooms வெப் சீரிஸ் உட்பட சில தொடர்களையும், குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.
யூடியூபரான இவர் தனது முதல் திரைப்படமான இந்த Backrooms-ஐ 10 மில்லியன் பட்ஜெட்டில் உருவாக்கி, 221 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 2000 கோடி ரூபாய்) வரை வசூலை ஈட்டியுள்ளார்.

கிளார்க் எனும் முதன்மை கதாபாத்திரத்தில் சிவெட்டல் எஜியோஃபோர் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் அவருடனே நாம் பயணிப்பதுபோல் எதார்த்த நடிப்பை தந்துள்ளார். அவர் முடிவில்லாத அறைகளுக்குள் செல்லும் போதே, நாமும் அங்கு இருப்பது போன்ற உணர்வைத் தரும் வகையில் படத்தை இயக்கியுள்ளார் கேன்.
ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை கிளார்க் தனது அசிஸ்ட்டெஸ்ட், அவளது பாய்பிரெண்ட்டுடன் இரகசிய அறைக்குள் சென்ற பின்னர் வேகமெடுக்கிறது. அங்கு நடக்கும் சம்பவங்கள் எல்லாம் நமக்கு திக் திக் மொமெண்ட்தான். அதற்கு பின்னணி இசை பெரிதும் உதவியிருக்கிறது.

என்னதான் நடக்கிறது? இது எங்கு முடியும் என்ற குழப்பத்திலேயே திரைக்கதை நம்மை அழைத்து சென்றாலும், இறுதியில் அவிழ்க்கப்படும் முடிச்சுகள் ஆச்சரியப்படும் வகையில் உள்ளன. தெரபிஸ்ட் மேரியாக நடித்திருக்கும் ரெனேட் ரெய்ன்ஸ்வ்விற்கு இருக்கும் குழப்பம் நம்மை ஆட்கொள்ளும் வகையில், அவரது கதாபாத்திரத்தை இயக்குநர் வடிவமைத்துள்ளார்.
படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பது திரைக்கதையுடன் முடிவில்லா அறைகளை காட்டிய விதம்தான். என்றாலும் படம் வேகமெடுக்க நேரம் எடுத்துக்கொள்வது பலருக்கு அயற்சியை ஏற்படுத்தலாம்.
க்ளாப்ஸ்
திரைக்கதை
கிளைமேக்ஸ்
நடிகர்களின் பங்களிப்பு
பின்னணி இசை மற்றும் கலையமைப்பு
பல்ப்ஸ்
ஆரம்ப காட்சிகள் சற்று மெதுவாக நகர்வது பலருக்கு அயற்சியை தரலாம்
மொத்தத்தில் இந்த Backrooms வித்தியாசமான சுவாரஸ்ய அனுபவம். சைக்கோலாஜிக்கல் த்ரில்லர் விரும்பிகள் கண்டிப்பாக பார்க்கலாம்.

ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி : இந்த ராசியினர் வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும்! உங்க ராசியும் இருக்கா? Manithan
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri