குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி- என்ன இப்படி ஆகிடுச்சு
மற்றவர்களை சிரிக்க வைப்பது என்பது தான் உலகில் உள்ள மிக கஷ்டமான ஒரு விஷயம். அப்படி ஒரு விஷயத்தை அசால்ட்டாக செய்து வருகின்றனர் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி குழுவினர்.
கண்டிப்பாக ஷோவை இப்படி காமெடியாக கொண்டு செல்ல நிகழ்ச்சி குழுவினர் பெரிய உழைப்பை போட்டிருப்பார்கள்.
இப்போது ஷோ மிகப்பெரிய ஹிட், எப்போது அடுத்த ஷோ வருமோ என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு செம ரீச். தற்போது இந்நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி வந்துள்ளது.
அதாவது கடந்த வாரம் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி என்பதால் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி நின்றது. இந்த வாரம் சூப்பர் சிங்கர் என்பதால் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி இல்லையாம்.
இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.