படே மியான், சோட்டே மியான் திரை விமர்சனம்
பாலிவுட் திரைப்படங்கள் கொஞ்ச நாட்களாகவே தேசப்பற்று பொங்கி தான் வலிகிறது. அதிலும் அக்ஷய் குமார் படம் என்றால் சொல்லவா வேண்டும், அப்படி ஒரு மற்றொரு தேசப்பற்று படமாக வந்துள்ள படே மியான், சோட்டோ மியான் படம் எப்படி என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே இந்தியாவின் மிகப்பெரும் வெப்பென்(ஆயுதம்) ஒன்றை முகமூடி போட்ட ஒருவன் பெரும் படையுடன் வந்து திருடுகிறான். இது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்க, இந்தியன் மிலிட்ரி என்ன செய்வது என்று தெரியமால் முழிக்கிறது.
அந்த நேரத்தில் ஒரு கமாண்டர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2(அக்ஷய் குமார், டைகர் ஷெரப்) சோல்ஜர்கள் பற்றி சொல்ல, இந்தியாவிற்கு எந்த பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக இந்த இரண்டு பேர் களத்தில் இறங்கி காப்பாற்றுகின்றனர்.
அப்படி இருந்த 2 பேர் பல வருடம் சஸ்பெண்ட் பிறகு இந்தியாவின் மிகப்பெரும் வெப்பெனை திருடுன முகமூடி நபரை கண்டுப்பிடிக்க், இவர்கள் உதவியை நாட, அவர்கள் இந்த ஆப்ரேஷனை சக்சஸ்புல் ஆக முடித்தார்களா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
படத்தின் இயக்குனர் அலி அபாஸ் இதற்கு முன் பல ஆக்ஷன் படங்களை எடுத்துள்ளார் என்பதற்காகவே இதில் முழுவதும் ஆக்ஷ்ன் ஆக்ஷன் என அக்ஷய் குமார், டைகர் ஷெரப் என்ற இரண்டு அக்ஷன் ஹீரோக்களை வைத்து அதகளம் செய்துள்ளார்.
அதிலும் சீனியர் அக்ஷய் விவேகத்தால் அனைவரையும் வீழ்த்த, இளம் டைகர் ஷெரப் வேகத்தால் அனைவரையும் அடித்து தும்சம் செய்வது என ஹீரோ ஹீரோயின் தாண்டி இவர்கள்.கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
என்ன பர்ஸ்ட் ஆப் முழுவதும் எதோ சண்டை, சண்டை என போய்க்கொண்டே இருக்க, கதை என்ன தன் சொல்ல் வருகிறீர்கள் என கேட்கும் நேரம், இடைவேளையில் செம டுவிஸ்ட் வைத்து நிமிர்ந்து உட்கார வைக்கின்றனர்.
என்ன அந்த டுவிஸ்ட் வரும் வரை பல லட்சம் புல்லட் சத்தங்களை நீங்கள் கேட்க வேண்டும், படத்தில் வரும் வில்லன்கலுக்கு சில சூப்பர் பவர் போல் அவர்களை சுட்டால் கூட, மறைந்து விடுகிறது. ஆனால், இதெல்லாம் எந்த பவரும் இல்லாமல் கூட அக்ஷய். டைக்ர் மேல் ஒரு குண்டு கூட படவில்லை. 1000 பேர் சுற்றி நின்று சுட்டாலும், இவர்கள் ஜாலியாக மாஸ் BGM போட்டு கூல்-ஆக நடந்து தான் வருகிறார்கள். புல்லட் எல்லாம் எங்க போகிறது என்றே தெரியவில்லை.
ஆனால், ஒரு சர்ப்ரைஸ் கேரக்டர் என படம் முழுவதும் ஒருவரை மறைத்து வைத்து இடைவேளையில் சர்ப்ரைஸாக காட்டுகிறார்கள். ஆனால், அவரை இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் காட்டிவிட்டார்கள், பிறகு எப்படி அந்த சர்ப்ரைஸ் கேரக்டர் பிரித்விராஜ்-யை பார்த்து நமக்கு சர்ப்ரைஸ் வரும். என்ன சார் இது..
அதோடு வழக்கம் போல் இவர்கள் கூட்டத்தில் இருக்கும் ஒரு நண்பர் ஒன்றாக இருப்பார்கள் பிறகு ஒரு பிரச்சனையில் தேசத்திற்கு எதிராக வந்து அவரே நண்பர்கள் முதுகில் குத்துவது என்ற பார்த்து பழகி போன ப்ளாஸ்பேக் காட்சிகள்.
சண்டைக்காட்சிகள் நன்றாக இருந்தாலும் அளவுக்கு அதிகமான லாஜிக் மீறல்கள் ஒரு கட்டத்தில் போதும்டா சாமி என்று சொல்ல வைக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு கலர்புல் ஆக பல நாடுகள் இடங்கள் என அழகாக சுற்றி காட்டுகின்றனர். இசை ஓகே.
க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி, அதிலும் குறிப்பாக இடைவேளை டுவிஸ்ட்.
பல்ப்ஸ்
பார்த்து பழகி போன அதே தேசப்பற்று பழி வாங்கும் கதை.
சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை.