அமிதாப், பகத், மஞ்சு வாரியர் வரிசையில் தலைவர் 170ல் இணைந்த பாகுபலி நடிகர்.. வேற லெவல் அப்டேட்
தலைவர் 170
ஜெயிலர் கொடுத்துள்ள வெற்றி ரஜினிக்கு செம மைலேஜ் கொடுத்துள்ளது. Tj ஞானவேல், லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களுடன் அடுத்தடுத்து இயக்கவிருக்கிறார். இதில் Tj ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது. மேலும் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கப்போவதாக தெரியவந்துள்ளது. அமிதாப் பச்சன் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது. அது ஏறக்குறைய உறுதியான தகவல் தான்.
பாகுபலி நடிகர்
மேலும், மஞ்சு வாரியர், பகத் பாசில் உள்ளிட்டோரும் இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்களுடன் தெலுங்கு நடிகர் ராணா இணைந்து நடிக்கவுள்ளாராம். முதலில் நாணி இப்படத்தில் கமிட்டாகியுள்ளார் என கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் நடிக்கவிருந்த ரோலில் தான் ராணா நடிக்கவிருக்கிறார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பின் அடுத்த வருடம் மார்ச் மாதம் லோகேஷ் கனகராஜ் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
