பாகுபலி சாதனையை அடித்து நொறுக்கிய பொன்னியின் செல்வன்.. வேற லெவல் மாஸ்
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. மணி ரத்னம் இயக்கியிருந்த இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். முதல் ஷோவில் இருந்து சிறந்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வரும் இப்படம் வசூலில் சக்கப்போடு போட்டு வருகிறது.
தமிழக வசூல்
ஆம், இதுவரை தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 150 கோடிக்கும் மேல் பொன்னியின் செல்வன் வசூல் செய்துள்ளதாம். இனி வரும் நாட்களில் பொன்னியின் செல்வன் கண்டிப்பாக ரூ. 180 கோடியை தமிழகத்தில் தாண்டும் என்றும் கூறப்படுகிறது.
இதன்முலம் பாகுபலியின் தமிழக வசூல் ரூ. 153 கோடியை அசால்டாக அடித்து நொறுக்கியுள்ளது பொன்னியின் செல்வன். அதுமட்டுமின்றி விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களின் வசூல் சாதனையையும் இப்படம் முறியடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
