சின்னத்தை நீக்க வேண்டும்.. விஜய்யின் கட்சி கொடிக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!!
த.வெ.க
நடிகர் விஜய், தனது கட்சியின் கொடியும், கட்சி பாடலையும் இன்று அறிமுகம் செய்துள்ளார். இது தான் இன்று தமிழ் நாட்டில் ஹாட் டாபிக்காக சென்று இருப்பது.
த.வெ.க கொடியில் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடியில் இரண்டு போர் யானைகள் மற்றும் வாகை மலர் இடம்பெற்றிருக்கிறது. அந்த இந்த நிறங்களும் சின்னங்களும் குறிப்பிடுவது என்ன என்பதை ரசிகர்கள் DE CODING செய்து வருகின்றனர்.
புதிய சிக்கல்!!
இந்நிலையில் தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கொடிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதிமுறைகளை மீறுகிறது என்றும், உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும், இல்லையென்றால் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
