இதுல என்ன பிற்போக்குத்தனம்?, என்கிட்ட ஆதாரம் இருக்கு.. மோகன்.G பேட்டி
பகாசூரன்
திரௌபதி, பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கிய மோகன்.G தற்போது பகாசூரன் என்ற பெயரில் படம் இயக்கி இருக்கிறார். செல்வராகவன் நடித்து இருக்கும் அந்த கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது.
ஆன்லைன் தளங்கள் உதவி உடன் நடக்கும் விபச்சாரம் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி இந்த படம் பேசி இருக்கிறது என்றாலும் பல பிற்போக்கான கருத்துகளும் இருக்கிறது என விமர்சனம் எழுந்திருக்கிறது. பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என சொல்வது போல தான் படம் இருக்கிறது என சிலர் கூறி இருக்கின்றனர்.
இதுல என்ன பிற்போக்குதனம்?
இந்நிலையில் மோகன்.G அளித்திருக்கும் பேட்டியில் விமர்சனங்களுக்கு பதில் கொடுத்து இருக்கிறார்.
”சில குறிப்பிட்ட ஆன்லைன் தளங்களில் விபச்சாரம் பற்றிய விளம்பரங்கள் அதிகம் இருக்கிறது, அதற்கான ஆதாரமும் இருக்கிறது” என சொல்லி தனது போனில் எடுத்து காட்டி இருக்கிறார் மோகன்.G.
மேலும் ”இது பற்றி சில தினங்களுக்கு முன்பு இரண்டு பேர் போலீசாரால் கைதும் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த செய்தியை பாருங்க.”
"ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு தந்தை தனது மகளை 150 கிலோமீட்டர் இருக்கும் கல்லூரியில் படிக்க சொல்கிறார், 300 கிலோமீட்டர் செல்ல வேண்டாம் என சொல்கிறார்.. இதில் என்ன பிற்போக்கு தனம் இருக்கிறது?" என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
முழு பேட்டி இதோ