பகாசூரன் இயக்கிய மோகன்.ஜி-க்கு இவ்ளோ சம்பளமா? எவ்வளவு பாருங்க
செல்வராகவன் நடிப்பில் பகாசூரன் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கிய மோகன்.ஜி தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார்.
பகாசூரன் படத்திற்கு கலவையான விமர்சனம் தான் கிடைத்து வருகிறது. அதனால் படத்திற்கு சுமாரான வசூல் தான் கிடைத்து வருகிறது. மூன்று நாட்களில் 5 கோடி ருபாய் வரை பகாசூரன் வசூலித்து இருப்பதாக தெரிகிறது.

இயக்குனர் சம்பளம்
பகாசூரன் இயக்குனர் மோகன்.ஜியின் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு தனது சம்பளம் 30 முதல் 35 லட்சம் வரை இருக்கும் என அவரே கூறி இருக்கிறார்.
பெரிய ஹீரோ படங்கள் கிடைத்தால் நிச்சயம் கோடிகளில் சம்பளம் வாங்குவேன் வேண்டும் அவர் கூறியுள்ளார்.

முடிவுக்கு வரும் கண்ணான கண்ணே சீரியல்! கிளைமாக்ஸ் போட்டோ இதோ