அமிர்தாவிடம் தனது காதலை கூறிய எழில்.. பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த திருப்பம்
விஜய் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி.
குடும்ப தலைவிகள் வீட்டில், உறவுகள் மத்தியில் படும் கஷ்டங்களை பாக்கியலட்சுமி சீரியல் எதார்த்தமாக காட்டுகிறது.
இந்த சீரியலில் கதாநாயகன் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே. விஷால். இவருக்கு ஜோடியாக அமிர்தா எனும் கதாபாத்திரத்தில் நடிகை ரித்திகா நடித்து வருகிறார்.
ஏற்கனவே திருமணமாகி, கணவனை இழந்து, தனது குழந்தையை வளர்த்து வரும் அமிர்தாவிடம் எப்படி தனது காதலை சொல்வது என்று தவித்து வந்தார் எழில்.
இந்நிலையில், வரும் வாரத்தின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் அமிர்தாவின் குழந்தை, தீடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறது.
தனது குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றிய எழிலுக்கு, அமிர்தா நன்றி தெரிவிக்கிறார்.
அப்போது தாமதிக்காமல் தன்னுடைய காதலை அமிர்த்தாவிடம் கூறிவிடுகிறார் எழில். இதோ அந்த ப்ரோமோ..