பாலாவுக்கு என்ன ஆச்சு? திடீரென குக் வித் கோமாளிக்கு வராமல் போனது ஏன்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் பங்கேற்கும் பலரும் தற்போது புகழின் உச்சியிலே இருக்கிறார்கள். புகழ் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் பல பிரபலங்களும் சினிமாவில் களமிறங்கி இருக்கின்றனர்.
இந்த ஷோவில் முக்கிய கோமாளியாக இருந்து வருகிறார் பாலா. அவர் ஷோவில் இருந்தால் என்டர்டெயின்மென்டுக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இன்றய குக் வித் கோமாளி எபிசோடில் பாலா பங்கேற்கவில்லை. அதனால் அவரது ரசிகர்கள் ஷாக் ஆனார்கள். அவருக்கு பதில் சரத் தான் இன்று கோமாளியாக வந்தார்.
பாலா வராமல் போனது ஏன் என ஷோவில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். அவர் தற்போது வெளியூரில் சிக்கிக்கொண்டதால் ஷூட்டிங்கிற்கு வர முடியவில்லை என தெரிவித்து உள்ளனர். அதனால் அடுத்த வாரம் பாலா கண்டிப்பாக ஷோவுக்கு வருவார் என தெரிகிறது.