பாலா - அஜித் சர்ச்சையின் பின்னால் நடந்தது இது தானாம் ! சண்டை இல்லையாம்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை பெரிய வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதற்கிடையே அஜித் திரைப்பயணத்தில் மிஸ் செய்த திரைப்படங்களில் ஒன்று நான் கடவுள், பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு இப்படம் வெளியானது.
அஜித் - பாலா இடையே ஏற்பட்ட சண்டை காரணமாகவே அஜித் நான் கடவுள் படத்தில் நடிக்கவில்லை என பேசப்பட்டது.
ஆனால் அது குறித்து வேறுசில காரணங்களும் கூறப்படுகிறது, அதன்படி நான் கடவுள் படத்திற்காக அஜித் முடியெல்லாம் வளர்த்து மூன்று மாதம் வரை காத்திருந்தாராம்.
இயக்குனர் பாலாவோ படத்தின் கதையை யாரிடமும் முழுமையாக சொல்லாதவர், ஸ்பாட்டில் தான் சீனை உருவாகும் பழக்கம் உடையவர். மேலும் அஜித் கதையை முழுமையாக சொல்லும் படி கேட்டுவந்தாராம்.
அஜித்திடம் சில நடிகைகள் பாலா ஸ்பாட்டில் தான் கதையை உருவாக்குவார், முழுமையாக கதையை சொல்லமாட்டார் என கூறியுள்ளனர். இதனால் அஜித் பாலாவை அவரின் அலுவலகத்திற்கு அழைத்துள்ளார்.
பின் அவரிடம் கதையை முழுமையாக சொன்னால் தான் நடிப்பேன், இல்லை என்றால் நடிக்க மாட்டேன் என சொல்ல, அதற்கு பாலா நான் யாருக்கும் கதை சொல்லி பழக்கம் இல்லை என்றதும் அஜித் நான் இந்த படத்தில் நடிக்கவில்லை, என அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டாராம்.
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan