பாலா உடன் வாக்குவாதம், பாதியில் வெளியேறினாரா சூர்யா? 2டி நிறுவனம் விளக்கம்
சூர்யா தனது 41வது படத்திற்காக பாலா உடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது.
ஷூட்டிங்
பாலா இந்த படத்திற்காக கன்னியாகுமரியில் கடற்கரை பகுதியில் செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார். ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று சூர்யா மற்றும் பாலா இடையே படப்பிடிப்பில் வாக்குவாதம் நடைபெற்றது வேண்டும், அதன் பின் சூர்யா கோபமாக கிளம்பி சென்றுவிட்டார் என்றும் தற்போது தகவல் பரவி வருகிறது.
2டி நிறுவனம் விளக்கம்
சூர்யாவின் 2டி நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்து வருகிறது. பாலா - சூர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு என தகவல் பரவ அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் தற்போது 2டி நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
முதற்கட்ட ஷூட்டிங் கன்னியாகுமரில் முடிந்துவிட்டது என்றும், அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் ஜூன் மாதம் தொடங்கும் என அறிவித்து உள்ளனர். அதற்காக அங்கு செட் போடும் பணிகள் நடந்து வருகிறதாம்.
#Suriya41@gvprakash #Balasubramaniem @IamKrithiShetty @editorsuriya #Mayapandi @mamitha_baiju @manojdass07
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) May 4, 2022