விஜய் பட நடிகையை அடித்தாரா இயக்குனர் பாலா.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இயக்குனர் பாலா
இயக்குனர் பாலாதமிழ் சினிமாவில் முக்கிய படைப்பாளிகளில் ஒருவர். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் வணங்கான். அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் வருகிற 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவருகிறது.
இப்படத்தில் முதலில் சூர்யா கதாநாயகனாக நடித்தார். திடீரென அவர் வெளியேறிய நிலையில், அருண் விஜய்யை வைத்து இப்படத்தை இயக்கினார் பாலா.
அதே போல் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது மலையாள சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ. இப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் பாலா, மமிதா பைஜூவை அடித்துவிட்டார்.
அதனால் அவர் படத்திலிருந்து விலகிவிட்டார் என கூறப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என மமிதா பைஜூ இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மமிதா பைஜூவை அடித்தாரா பாலா
இந்த நிலையில், இயக்குனர் பாலாவிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த இயக்குனர் பாலா, "மமிதா பைஜூ எனக்கு மகள் மாதிரி. அவள்போய் நான் அடிப்பேனா. அதுவும் ஒரு பொம்பள புள்ளையே போய் அடிப்பாங்களா. சின்ன புள்ள அது, அதேபோய் யாரவது அடிப்பாங்களா. பாம்பே-ல இருந்து வந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட், எனக்கு தெரியாம மமிதா பைஜூவிற்கு மேக்கப் போட்டு விட்டுருச்சு.
அதுக்கு தெரியாது எனக்கு மேக்கப் போட்டா பிடிக்காது என்று. மமிதாவிற்கும் சொல்ல தெரியவில்லை, எனக்கு மேக்கப் போட்டால் பிடிக்காது என்று. ஷாட் ரெடி என கூப்பிட்டால் மேக்கப் போட்டு இருந்தார். யார் மேக்கப் போட்டா என கேட்டு, அடிக்கிற மாதிரி கை ஓங்கினேன். அதை நான் மமிதா பைஜூவை அடித்துவிட்டேன் என செய்தி கிளம்பிவிட்டது." என இயக்குனர் பாலா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
வணங்கான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக இருந்த மமிதா பைஜூ தற்போது தளபதி விஜய்யின் தளபதி 69 படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
