விவாகரத்தை தொடர்ந்து முக்கிய இடத்தில் சூர்யாவின் படத்தை தொடங்கும் பாலா !

bala jothika suriya pithamagan nandha et muthu malar
By Jeeva Mar 08, 2022 08:00 AM GMT
Report

சூர்யா ஜோதிகாவை இயக்கும் பாலா

இயக்குனர் பாலா அடுத்து நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அப்படம் குறித்த அடுத்தகட்ட அறிவிப்பு ஏதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

விவாகரத்தை தொடர்ந்து முக்கிய இடத்தில் சூர்யாவின் படத்தை தொடங்கும் பாலா ! | Bala To Begin Shoot For Suriya

மேலும் பல வருடங்கள் கழித்து இப்படத்தில் மீண்டும் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கவுள்ளனர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசைமைக்கவுள்ள இப்படம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

அதன்படி வரும் 18 ஆம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் தொடங்கவுள்ளதாம், சூர்யாவின் 41வது திரைப்படமாக தயாராகும் இந்தப் படத்திற்காக மதுரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான கடந்த சில திரைப்படங்கள் பெரிய வரவேற்பை பெற தவறியது. கடைசியாக துருவ் விக்ரம் இவர் இயக்கிய வர்மா திரைப்படம் திரைக்கு வராமலே போனது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூர்யா 41

இதனால் தற்போது இவர் இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யா திரைப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மீண்டும் பழைய பாலா போல் தாக்கத்தை ஏற்ப்படுத்த கூடிய படத்தை அவர் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.  

விவாகரத்தை தொடர்ந்து முக்கிய இடத்தில் சூர்யாவின் படத்தை தொடங்கும் பாலா ! | Bala To Begin Shoot For Suriya

தனது மனைவியை விவாகரத்து செய்த இயக்குனர் பாலா..! வெளிவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US