பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் நான் வாங்கிய சம்பளம் இவ்வளவு தான்.. ஓபனாக கூறிய பாலாஜி முருகதாஸ்
பாலாஜி முருகதாஸ்
மக்கள் மிகவும் ஆர்வமாக பார்க்கும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ்.
4வது சீசனில் கலந்துகொண்டு ரன்னராக தேர்வான பாலாஜி முருகதாஸ் நடிப்பில் சமீபத்தில் ஃபயர் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. படம் வெளியாகி மக்களிடம் மாஸ் வரவேற்பு பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி வருகிறது.
இதனால் தயாரிப்பாளர் பாலாஜி முருகதாஸிற்கு ஒரு தங்க செயின் பரிசாக கொடுத்தார்.
சம்பளம்
படம் சூப்பராக ஓடிக் கொண்டிருப்பதால் வெற்றிவிழா கொண்டாட்டம் நடந்தது.
அந்நிகழ்ச்சியில் நிறைய விஷயம் பேசிய பாலாஜி முருகதாஸ் தனக்கு பிக்பாஸில் கலந்துகொண்டதற்காக எவ்வளவு சம்பளம் கிடைத்தது என்பதை பற்றி ஓபனாக கூறியுள்ளார்.
அதில் அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் ரூ. 1 கோடி கிடைக்கும் என்று போனேன், ஆனால் எனக்கு ரூ. 45 லட்சம் தான் சம்பளம் கிடைத்தது. பிக்பாஸ் சம்பளத்தை வெளியே சொல்ல கூடாது என்று யாரு சொன்னது, நான் சொல்வேன் என்று பேசியிருக்கிறார்.