சிம்புவுடன் குழந்தையாக நடித்திருக்கும் பாலாஜி முருகதாஸ்! பிக் பாஸில் அவரே சொன்ன உண்மை
பிக் பாஸ் அல்டிமேட் ஷோவுக்கு சிம்பு தான் தற்போது புது தொகுப்பாளர். கமல் சில காரணங்களால் திடீரென வெளியேற, அவருக்கு பதில் தற்போது சிம்பு தொகுத்து வழங்க ஆரம்பித்து இருக்கிறார்.
நேற்று பிக் பாஸ் வீட்டுக்கு வந்த சிம்பு ஒவ்வொரு போட்டியாளராக தனித்தனியாக சந்தித்தார். போட்டியாளர்கள் அனைவரும் சர்ப்ரைஸ் ஆனார்கள். பாலாஜி முருகதாஸ் ஒரு படி மேலே சென்று கோட் கழற்றி சுற்றி தூக்கிப்போட்டார்.
அதன் பின் சிம்பு எல்லோருடனும் பேசிக்கொண்டிருக்கும்போது தான் வல்லவன் படத்தில் நடித்திருப்பது பற்றி பாலாஜி கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறார்.
வல்லவன் படத்தில் வரும் 'ஊரே துணை இருக்கு, எனக்கிங்கே வேறு உறவெதற்கு' என வரும் பாடலில் சிம்பு குழந்தைகளுக்கு நடுவில் டான்ஸ் ஆடி இருப்பார். அந்த பாடலில் பின்னணியில் பாலாஜி முருகதாஸும் இருந்தாராம். அப்போது இருந்தே தான் சிம்புவின் ஃபேன் என பாலாஜி கூறினார்.
இதை கேட்ட சிம்பு 'நீ இப்படி சொன்னால்.. நான் என்னமோ ரொம்ப வயசானவன் என நினைத்துக்கொள்ள போறாங்க, நானும் சின்ன பையன் தான்பா' என சிம்பு கூறி சிரித்தார்.