பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் ஜெயித்த பாலாஜி முருகதாஸ்! பரிசு தொகை இத்தனை லட்சம் தான்
பிக் பாஸ் அல்டிமேட் ஷோவின் கிராண்ட் ஃபினாலே நேற்று ப்ரமாண்டமாக நடந்தது. அதில் பாலா டைட்டில் ஜெயித்தார்.
எமோஷ்னல் சிம்பு
பாலாஜி முருகதாஸ் மற்றும் நிரூப் இருவரும் தான் கடைசி இருவராக மேடையில் வந்து நின்றனர். அவர்களில் யார் வெற்றியாளர் என அறிவிக்கும் முன்பு சிம்பு சற்று எமோஷ்னலாக பேசினார்.
இன்று இவர்களுக்கு மட்டும் அல்ல, எனக்கும் கடைசி நாள் தான். கமல் சார் இடத்தை என்னால் நிரப்ப முடியாது. ஆனால் கடந்த சில வாரங்களாக ஒரு குழந்தை போல என்னை தட்டி கொடுத்து ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என கூறினார்.
பாலாஜி முருகதாஸுக்கு டைட்டில்
அதன் பின் வெற்றியாளர் பாலாஜி முருகதாஸ் தான் என சிம்பு அறிவித்தார். டைட்டில் ஜெயித்த பின் பேசிய பாலாஜி முருகதாஸ் தான் போன சீசனில் வெற்றி பெற மாட்டேன் என தெரிந்தே தான் வந்து நின்றேன், அதனால் எனக்கு ஏமாற்றம் இல்லை. இந்த முறையும் எனக்கு ஆதரவு கொடுத்து வாக்களித்த அனைவருக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என பாலா கூறினார்.
மேலும் பாலாஜிக்கு 35 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. ஏற்கனவே சுருதி 20 லட்சம் ரூபாயுடன் வீட்டில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.