எனக்கு மட்டும் ஏன் இப்படி.. தியேட்டர் வாசலில் கண்ணீர் விட்ட பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்
பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் தற்போது ஹீரோவாக நடித்து இருக்கும் ஃபயர் படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது.
படம் ரிலீஸ் ஆன தியேட்டருக்கு சென்று பாலாஜி அங்கு மக்களது ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என பார்த்துவிட்டு, வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
எனக்கு மட்டும் ஏன் இப்படி..
அப்போது பாலாஜி முருகதாஸ் கண்ணீர் உடன் தனக்கு மட்டும் நெகட்டிவிட்டி அதிகம் வருகிறது என பேசினார். சற்று நேரம் கழித்து கூலிங் க்ளாஸ் போட்டுகொண்டு தொடர்நது பேசினார்.
"விமர்சனம் எழுதும்போது அவர்களது confidence மற்றும் self respect பாதிக்காமல் செய்தால் நன்றாக இருக்கும்."
"புதுமுகங்களின் நேரத்தை தயாரிப்பாளர் வீணடிக்கிறார். ஏன் என கேட்டால் 'உனக்கு நடிக்கவே வராது' என சொல்வார்கள். அந்த நபரை நான் மன்னிக்கவே மாட்டேன்."
"இவன் முகத்தில் expression வரல, இவன் தேற மாட்டான் என விமர்சனம் செய்கிறார்கள். (பணம்) இருக்கிறவனை இப்படி பிராண்ட் பண்ண மாட்டேங்குறீங்க. இல்லாதவனை மட்டும் தான் அப்படி பண்றீங்க" என கூறி இருக்கிறார் .