காதல் நாடகம் ஆடுகிறார் பாலாஜி முருகதாஸ்: வனிதா சொன்ன அதிர்ச்சி புகார்
பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் தற்போது வனிதா விஜயகுமார் மற்றும் பாலாஜி முருகதாஸ் இடையே தான் மோதல் அதிகம் நடந்து வருகிறது. இருவரும் எதற்கெடுத்தாலும் சண்டை போட்டு வருகின்றனர். ஒரு போட்டியாளரை எல்லோரும் சேர்த்து முடிவு செய்து எலிமினேட் செய்ய வேண்டும் என சொல்லி பொய்யாக வீட்டில் பிராங்க் செய்தார் பாலாஜி. அது பெரிய சண்டைக்கு காரணம் ஆகிவிட்டது.
இந்நிலையில் தற்போது வனிதா பாலாஜி மீது அதிர்ச்சி புகார் ஒன்றை கூறி இருக்கிறார். வனிதா கூறியதாவது..
பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் முன்பு quarantineல் வனிதாவிடம் பேசிய பாலாஜி தனக்கு வெளியில் ஒரு காதலி இருக்கிறாள், திருமணம் செய்ய பணம் வேண்டும், அதற்காக தான் பிக் பாஸ் அல்டிமேட் வந்தேன் என கூறினார். ஆனால் பிக் பாஸ் வீட்டுக்குள் அபிராமியிடம் நெருக்கமாக நடந்து கொள்கிறார். அவளும் பாலாஜியை நம்பி கொண்டிருக்கிறாள்.
அது பற்றி நான் கேட்டபோது 'நான் வெளியில் சொன்னதை அபிராமியிடம் சொல்லிடாதீங்க' என கூறுகிறார். "இப்படி திட்டம் போட்டு லவ் ட்ராமா செய்துகொண்டிருக்கிறார் பாலாஜி" என வனிதா குற்றம்சாட்டி இருக்கிறார்.
ஆனால் பாலாஜி இதை மறுத்து இருக்கிறார். "ஆபிராமி சிரித்து பேசுவதால் அவரிடம் சிரித்து பேசுகிறேன். வேறு யார் நன்றாக பேசினாலும் அப்படி பேசுவேன். வேறு எதுவும் இல்லை. என்னை பற்றி எதாவது குறை சொல்ல வேண்டும் என வனிதா இப்படி சொல்கிறார்" என பாலாஜி முருகதாஸ் கூறி இருக்கிறார்.