ஷிவானி அம்மாவின் வருகையை தொடர்ந்து, தவறு செய்து விட்டதாக கண்ணீர் சிந்தும் பாலாஜி..! {ப்ரோமோ 2}
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 85 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது, இந்த முறை யார் பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் சென்ற வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்த அனிதா சம்பத் வெளியேறினார்.
இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது, அதில் ரசிகர்களிடையே பிரபலமான ப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது.
அந்த வகையில் முதலில் நுழைந்துள்ள ஷிவானியின் அம்மா அவரிடம் "இந்த வீட்டில் நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என தெரியாது நினைத்தாயா? என கூறிவிட்டு செல்ல, ஷிவானி தனியாக அழுது கொண்டு உள்ளார்.
இதனால் கவலையடைந்த பாலாஜி ஷிவானி குறித்து விஷயத்தில் தானும் சம்மந்தப்பட்டு இருப்பதாக கூறி கண்கலங்கியுள்ளார்.