ஜெயிலர் 2வில் ரஜினியுடன் இந்த மூத்த நடிகர் இணைகிறாரா.. நெல்சன் சம்பவம்
ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றியை தமிழ் சினிமாவிற்கு பெற்று தந்தது என்பதை நாம் அறிவோம்.
நெல்சன் திலீப்குமாருடன் ரஜினிகாந்த் முதல் முறையாக கூட்டணி அமைத்த இப்படம் உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தனர். மேலும் அனிருத் இசையமைத்திருந்தார்.
மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு எதிர்பார்க்காத அளவிற்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
ஜெயிலர் 2 படத்தில் இவரா
இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றனர். மேலும் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு HUKUM என தலைப்பு வைத்துள்ளார்களாம். இந்த நிலையில், படத்தில் ரஜினியுடன் நடிக்கவிருக்கும் நட்சத்திரம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் ரஜினியுடன் மூத்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். முதல் பாகத்தில் வந்த சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷரோப் போல் இப்படத்தில் பாலகிருஷ்ணாவின் என்ட்ரி இருக்கும் என கூறப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
