பவன் கல்யாண் முதல் கங்கனா வரை.. தேர்தலில் ஜெயித்த சினிமா நட்சத்திரங்கள்
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆந்திரா உள்ளிட்ட சில மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகிறது.
இந்த தேர்தலில் பல்வேறு நடிகர்கள் போட்டியிட்டு இருக்கின்றனர். ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஹிந்துபூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்து இருக்கிறார். அவர் மூன்றாவது முறையாக எம்எல்ஏ ஆகி இருக்கிறார்.
நடிகர் பவன் கல்யாண் எம்எல்ஏ தேர்தலில் 70 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறார். அவரது ஜனசேனா கட்சியும் போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் முன்னணியில் இருக்கிறது.
ஜெயித்த நடிகர்கள்
நடிகை கங்கனா ரணாவத் பாஜக சார்பில் ஹுமாச்சல பிரதேசத்தில் போட்டியிட்ட நிலையில் அவர் அதிக வாக்குகள் பெற்று ஜெயித்து இருக்கிறார்.
அவர் தனது அம்மாவிடம் ஆசி பெற்று இருக்கும் புகைப்படமும் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
மேலும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி கேரளாவில் எம்பி தேர்தலில் முன்னணியில் இருக்கிறார். அவரது வெற்றியும் கிட்டத்தட்ட உறுதி ஆகி இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
