நடிகர் விஜய்க்கு இதனால் தான் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் ! - தமிழ் சினிமாவின் ஜாம்பவான் சொன்ன விளக்கம்..

By Jeeva Jun 18, 2022 02:30 PM GMT
Report

விஜய் குறித்து பாலு மகேந்திரா

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா. இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் பல தமிழ் சினிமாவின் முக்கிய படைப்புகளாக பார்க்கப்படுகிறது.

அப்படியான சிறப்பினை உடைய பாலு மகேந்திரா பட்டறையில் இருந்து வந்தவர்கள் தான் வெற்றிமாறன், ராம், சீனு ராமசாமி உள்ளிட்டோர். இதனிடையே இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் மாமனிதன்.

இப்படத்தின் ப்ரமோஷனுக்காக பேட்டியளித்து வரும் சீனு ராமசாமி நடிகர் விஜய் குறித்த சுவாரஸ்யமான விஷயத்தை பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதன்படி அவரும் அவரின் குருநாதருமான பாலு மகேந்திரா உடன் காரில் சென்றுள்ளார். அப்போது விஜய்யின் நடிப்பில் லவ் டுடே உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி விஜய் மிகவும் பிரபலமான நடிகராகி வரும் நேரம்.

மேலும் விஜய்யின் வீட்டின் பக்கம் அவர்கள் இருவரும் சென்ற போது ரசிகர்கள் கூட்டம் விஜய்யின் முன் உள்ளதை பார்த்துள்ளனர். பின் விஜய்யின் போட்டோவை கண்ட பாலு மகேந்திரா சீனு ராமசாமியிடம் “இந்த பையனுக்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு தெரியுமா டா” என கேட்டுள்ளார்.

அதற்கு சீனு அவரின் திரைப்படங்கள் வெற்றியடைவது தான் காரணம் என கூறியுள்ளார். இல்லை, விஜய்யின் முகம் பூனைகள் குடும்பத்தை சேர்ந்தது, இந்த மாதிரியான முக அமைப்பை உடையவர்கள் எப்போது அதிக கவனம் ஈர்பார்கள் என சொன்னதாக சீனு ராமசாமி பேசியுள்ளார்.  

நடிகர் விஜய்க்கு இதனால் தான் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் ! - தமிழ் சினிமாவின் ஜாம்பவான் சொன்ன விளக்கம்.. | Balu Mahendhera About Vijay

வெற்றிமாறனுக்கு ஓகே சொன்ன முன்னணி ஹீரோ! வாடிவாசலுக்கு அடுத்து இந்த படம் தான்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US