படங்களை இயக்க இயக்குனர் சங்கருக்கு தடை? வெளியான ஷாக்கிங் செய்தி
இந்தியன் 2 படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி விட்டு இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் உருவாவிற்கும் ராமச்சரனின்புதிய படம் இயக்க சென்றுள்ளார்.
இதுமட்மின்றி அந்நியன் படத்தை, ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக சங்கர் அறிவித்திருந்தார்.
இதனை எதிர்த்து இந்தியன் 2 தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றது. இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க கோரி கேட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷங்கருக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்தியன் 2 தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ளது.
அது என்னவென்றால் தெலுங்கு, இந்தி திரைப்பட வர்த்தக சபைக்கு, இந்தியன் 2 தயாரிப்பு நிறுவனம் கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த கடிதத்தில் ' ஷங்கர் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் தெலுங்கு, இந்தி படங்களை இயக்க அனுமதிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு ' உள்ளது.
இதனால் தெலுங்கு, இந்தி படங்களை இயக்க அங்குள்ள திரைப்பட வர்த்தக சபையினர் ஷங்கருக்கு தடை விதிக்கலாம் என்ற பரபரப்பு செய்தி கூறப்படுகிறது.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri